Sunday, February 1, 2009

விடுதலை வேள்வியில் ஓர் தமிழன்

சகோதரன் முத்துகுமார்...

இரு நாட்களுக்கு முன்
என்னை போல்
சாதாரண தமிழன் நீ
இன்றோ உன்னை உலகறியச் செய்துவிட்டாய் !
பூவால் குளிப்பது போல்
தீக்குளிப்பதை இன்முகமாய் ஏற்றுகொண்டையமே!
குறைவாய் ஊற்றினால் காப்பாற்றிவிடுவர்
அதிக எண்ணையை ஊற்றினேன் என்றாயாமே!
அர்றிந்ததும் பதறித்தான் போனோம்
அவசரத்தில் உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு
என எண்ணினேன்
உன் அறிக்கையை பார்த்த பின்
மாற்றி கொண்டேன் என் எண்ணத்தை
எத்தனை தீர்க்கமான முடிவு !


ஆனால் சகோதரா
இத்தனை தெளிவுள்ள நீ
உயிரோடிருந்தால் இன்னும் சாதித்திருப்பாய்
நீயே வாங்கி கொடுத்திருப்பாய்
விடுதலையை எம்

தமிழர் கையில்
உன் வார்த்தைகளில்தான்
எத்தனை தெளிவு ,எத்தனை உண்மை ....


தமிழனை பற்ற்றி சிந்தித்த நீ
உன் குடும்பம் பற்றி நினையாமல் போனதேனோ !
உனக்கு உயிர் கொடுத்த பெர்ர்ர்ரூரைவிட்
தமிழன் உனக்கு முதன்மை ஆகி போனானே !
அவர்களை அனாதைகளாக்கி விட்டாயே
நீயாயம்தானா.......
அவர்களும் சளைத்தவர்கள் அல்ல அரசு கொடுத்த தொகையை மறுத்துவிட்டனராமே!
வணக்குகிறேன் அவர்களை

சகோதரா,.............
எத்தனயோ தியாகிகள் உன்னைப்போல்
நம் தமிழ் மண்ணில் .....
காலப்போக்கில் மறக்கப்பட்டவர்கள்
நாளை உன் நிலையும் அப்படி தானோ??????


சகோதரா நீ ....
எரித்துகொள்ளவில்லை
உன்னை எரித்துவிட்டனர்
தலைவர்கள் என்ற பெயரில் உள்ள
கயவர்கள் ..

எத்தனை உள்ள குமுறலில்
எடுத்திருபாய் இந்த முடிவை
நீ இறந்த பின் உன்னை காண
எத்தனை லட்சங்கள் !
அத்தனையும் உனக்கான ஆதரவுகள் .......
நீ அறிவாயோ !....

மாய்த்துகொண்டாயே...........

வீரத்திருமகனே நீ
விதைக்கபட்டிருக்கிறாய்
ஆலமரமாவாய் ...........
வணங்குகிறேன் உன்னை வீரத் தமிழா

இதை எழுதும் வேளை
மற்றுமொரு இளைஞனின் தீக்குளிப்பாம்
பதறுகிறது நெஞ்சம் .........
வேண்டாம் இளைஞர்களே
இனியும் வேண்டாம் .....

மற்றவர்களை கொல்வதில்
இன்பம் காணும் இழி பிறவிகள்
உயிரோடிருக்கும் போது
நீ ஏன் மாய்த்துகொல்கிறாய்
நீ உன்னதமானவன் .......

நீ இப்படி மாய்த்துகொண்டால்
மற்றுமொரு தமிழன் தொலைந்தான் என
இன்பம் காண்பர்
தமிழினத்தை
அழிக்க நினைக்கும் இழி பிறவிகள்
வேண்டாம் சகோதரர்களே
இனியும் இந்நிலை ........


விரைவில் எழுதுவோம்
வீர வரலாறு

0 comments:

Post a Comment